ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகலொன்று வந்திடுமே! நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில், இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு! மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!
உள்ளம் என்பது எப்போதும் உடைந்து போகக்கூடாது, என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக்கூடாது! எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயமில்லை சொல்லுங்கள்! காலப் போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்!
உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும், வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்! யாருக்கில்லைப் போராட்டம்! கண்ணில் என்ன நீரோட்டம்! ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு! மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம் வானம் அளவு யோசிப்போம் முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம்! இலட்சம் கனவு கண்ணோடு இலட்சியங்கள் நெஞ்சோடு, உன்னை வெல்ல யாரும் இல்லை உறுதியோடு போராடு!
மனிதா! உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும் அவமானம் படு தோல்வி எல்லாமே உரமாகும்! தோல்வியின்றி வரலாறா! துக்கம் என்ன என் தோழா! ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும்!
மனமே! ஓ! மனமே! நீ மாறிவிடு! மலையோ அது பனியோ நீ மோதிவிடு!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகலொன்று வந்திடுமே! நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு! மலையோ அது பனியோ? நீ மோதிவிடு!
Song: Muthan Muthalil Paarthen...
Movie: Aaha
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
நந்தவனம் இதோ இங்கேதான் நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன் நல்லவளே அன்பே உன்னால்தான் நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய் அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய் நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய் அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
முதற்பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே உயிர் வாழுமே
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
உத்தரவே இன்றி உள்ளே வா நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில் அந்த நொடி அன்பே என் ஜீவன் வேறெங்கு போனது பாரடி உன்னில் உன்னைக் கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன் மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன் உன்னைக் கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன் மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன் என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் ஞாபகம்.. உன் ஞாபகம்
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
Song: Aetho Oru Paadu...
Movie: Unnidathil Ennai Koduthen
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும் நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும் ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும் ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம் அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம் மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும் நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும் ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும் ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும் ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
Song: Yaar Intha Thevathai...
Movie: Unnai Ninaithu
Song: Paarthu Paarthu Kangal...
Movie: Nee Varuvai Ena
Song: Paadu Nilaave Then Kavithai...
Movie: UthayaGeetham
Song: Antha Vaanukku...
Movie: Poomagal Oorvalam
அந்த வானுக்கு இரண்டு தீபங்கள் அவை சூரியச் சந்திரரே என் வாழ்வுக்கு இரண்டு தீபங்கள் என் தாயொடு தந்தையரே
அந்த வானின் தீபங்கள் இல்லையென்றால் இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே என் பாசதீபம் இரண்டும் இல்லையென்றால் என் வாழ்வில் ஒளியும் இல்லையே ஒரு தாய் தந்தை போலே உலகில் உறவில்லையே
தாய்தானே அன்புக்கு ஆதாரம் தந்தைதானே அறிவுக்கு ஆதாரம் அந்த வானுக்கு இரண்டு தீபங்கள் அவை சூரியச் சந்திரரே
நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடி தாய்க்குப் பூசைகள் செய்க இமயமலைகளும் ஏழு கடல்களும் தந்தை நாமமே சொல்க
சுடு கோபங்கள் நானும் பார்த்ததில்லை ஒரு சுடு சொல்லுக் கூடக் கேட்டதில்லை ஒரு ஏழைத்தாய் போல் உலகில் தெய்வம் இல்லை.
தாய்தானே அன்புக்கு ஆதாரம் தந்தைதானே அறிவுக்கு ஆதாரம் அந்த வானுக்கு இரண்டு தீபங்கள் அவை சூரியச் சந்திரரே
தந்தை காலடி தாயின் திருவடி நல்ல மகனுக்குக் கோயில் அன்பின் முகவரி என்ன என்பதை கண்டு கொள்கிறேன் தாயில்
நான் உறவென்ற தீபம் ஏற்றி வைத்தேன் அதில் உயிரென்ற எண்ணெய் ஊற்றி வைத்தேன் நான் என்னில் கண்ணில் இருவரைச் சுமந்திருப்பேன்
தாய்தானே அன்புக்கு ஆதாரம் தந்தைதானே அறிவுக்கு ஆதாரம்
Song: Unnai Paartha Kangal...
Movie: Roja Vanam
Song: Sollividu VelliNilave....
Movie: AmaithiPadai
சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே உறவுகள் கசந்ததம்மா.. ஓ.. கனவுகள் கலைந்ததம்மா காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன் காற்றில் காய்ந்து போனபின் நானே என்னை தேற்றினேன் சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே உறவுகள் கசந்திடுமா... ஓ.. கனவுகள் கலைந்திடுமா..
உன்னை ஒருபோதும் மறவாது நான் தான் வாழ்ந்தேன்..ஓ. குற்றம் புரியாது உந்தன் மடி மீது ஏன் நான் வீழ்ந்தேன் ..ஓ அந்த கதை முடிந்த கதை எந்தன் மனம் மறந்த கதை என்ன செய்ய விடுகதை போல் என்னுடைய பிறந்த கதை காலங்கள் தான் போனபின்னும் காயங்கள் ஆறவில்லை..ஓ வேதனை தீரவில்லை
சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையெ உறவுகள் கசந்ததம்மா.. ஓ.. கனவுகள் கலைந்ததம்மா உறவுகள் கசந்ததம்மா.. ஓ.. கனவுகள் கலைந்ததம்மா
தொட்டகுறை யாவும் விட்டகுறை யாகும் வேண்டாம் காதல்..ஓ.. எந்தன் வழிவேறு உந்தன் வழிவேறு ஏனோ கூடல்..ஓ.. உன்னுடைய வரவை எண்ணி உள்ள வரை காதிருப்பேன் என்னை விட்டு விலகி சென்றால் மறுபடி தீக்குழிப்பேன் நான் விரும்பும் காதலனே நீ என்னை ஏற்றுக்கொண்டால் நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்..
சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையெ உறவுகள் கசந்ததம்மா.. ஓ.. கனவுகள் கலைந்ததம்மா காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன் காற்றில் சாய்ந்து போகுமா நெஞ்சி வைத்து ஏற்றினேன் சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையெ உறவுகள் கசந்ததம்மா.. ஓ.. கனவுகள் கலைந்ததம்மா உறவுகள் கசந்ததம்மா.. ஓ.. கனவுகள் கலைந்ததம்மா